Excel What if Analysis in Tamil
Excel What If Analysis in Tamil
Excel இல் “What IF Analysis” என்ற அற்புதமான ஒன்றை பற்றி நாம் தெரிந்துகொள்ள போகிறோம்.

இது Excel இல் Data என்ற tab இல் Forecast என்ற Group இல் அமைந்து உள்ளது. பொதுவாக இதைப்போன்ற சிறப்பான ஒன்றை நாம் கற்க தவறிவிடுகிறோம்.
இதை கற்பதன் மூலமாக Excel இல் உள்ள Data வை நாம் Analysis பண்ண முடியும். இந்த தொகுப்பில் நாம் மூன்று முக்கியமான விஷயங்களை கற்க போகிறோம்.
1) Scenario Manager
முதலில் நாம் சாம்பிள் calculation ஐ செய்து, பின் அந்த சாம்பிள் calculation மூலமாக நம்மால் நமக்கு தேவையான Scenarios களை உண்டுபண்ண முடியும். Scenario Manager என்றால் என்ன? இதை எப்படி செய்ய முடியும்? இதனுடைய வரம்புகள் என்ன? என்பதை எல்லாம் இந்த வீடியோ வில் நாம் தெரிந்துகொள்ள முடியும்
Download
Excel for Practice
எடுத்துக்காட்டாக : நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள். நீங்கள் உங்கள் அலுவலகம் தொடர்பான வளர்ச்சி திட்டத்தை உங்கள் அதிகாரிகளுக்கு காண்பிக்க விரும்புகிறீர்கள். அதற்காக, பலதரப்பட்ட Scenarios களை உருவாக்கி , அதை வணிக கூட்டங்களின்போது விளக்கக்காட்சி செய்ய முடியும்.
இந்த விடியோவை பார்த்து Scenario Manager ஐ பற்றி புரிந்துகொண்டு இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். பயிற்சி கோப்பும் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்து இருக்கும் என்று நம்புகிறேன்.
2) Goal Seek
Scenario Manager போலவே Goal Seek கும் ஒரு கணக்கிடப்பட்ட தகவலில் இருந்து ஒரு சில மாற்றங்கள் செய்யும்போது எப்படி அது மாற்றும் தகவல்களை மற்றும் என்றும், எந்த தகவலை மாற்றினால் நமக்கு சரியாக இருக்கும் என்றும் பார்க்க உதவுகிறது. Reverse Calculation ஐ செய்வதற்கு இது மிகவும் பயன்படுகிறது.
Download
Excel for Practice
எடுத்துக்காட்டாக : நீங்கள் ஒரு வீடுகட்ட 7 ஆண்டுகளில் 15 லட்சங்கள் தேவைப்படுகிறது, இந்த நிலையில் உங்கள் இலட்சியத்தை அடைய நீங்கள் எவ்வளவு செலவு செய்யவேண்டும், நீங்கள் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்று கணக்கிடுவதற்கு இந்த Goal Seek உதவுகிறது.
இந்த விடியோவை பார்த்து Goal Seek ஐ பற்றி புரிந்துகொண்டு இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். பயிற்சி கோப்பும் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்து இருக்கும் என்று நம்புகிறேன்.
3) Data Table
நாம் பார்த்துக்கொண்டு இருக்கிற ” What IF Analysis ” இல் உள்ள மூன்று விருப்பமும் (option) ஒரு கணக்கை அல்லது ஒரு கோப்பை வைத்து வேறொரு கணக்கை போடுவதற்கு, அல்லது எதிர்காலத்தை கணக்கிடுவதற்கு பயன்படுகிறது. Data Table கும் அதேமாதிரி ஒரு சாதாரண கணக்கை வைத்து, Data Analysis செய்ய முடியும்.
Download
Excel for Practice
எடுத்துக்காட்டாக : நீங்கள் ஒரு தொழில் செய்கிறீர்கள், அந்த தொழிலில் இருந்து நீங்கள் லாபமீட்ட முயற்சிப்பீர்கள் அல்லவா. எத்தனை பொருட்களை, எந்த விலைக்கு விற்றால், எத்தனை மாதத்தில், எவ்வளவு லாபமீட்டலாம் என்று கணக்கிட உகந்த ஒரு கருவி இந்த Data Table.
இந்த விடியோவை பார்த்து Data Table ஐ பற்றி புரிந்துகொண்டு இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். பயிற்சி கோப்பும் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்து இருக்கும் என்று நம்புகிறேன்.
முடிவுரை
இந்த மூன்று What IF Analysis இல் உள்ள தலைப்புகளும் (Scenario Manager, Goal Seek, Data Table) உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இதேமாதிரி அனேக பயனுள்ள Excel சார்ந்த காணொளிகளை காணவேண்டும் என்றால், நமது YouTube Channel ஐ பயன்படுத்திக்கொள்ளவும். இணைந்துஇருப்போம் Prabas MS Office உடன்.